மதுரை அருகே ஜல்லிக்கட்டை பார்க்க தமிழக ஆளுநர் வருகை: காவல் ஆணையர் ஆய்வு

மதுரை அருகே ஜல்லிக்கட்டை பார்க்க தமிழக ஆளுநர் வருகை: காவல் ஆணையர் ஆய்வு
X

ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருவதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் ஆணையாளர் நரேந்திர நாயர் பார்வையிட்டார்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ந் தேதி அன்று பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற பொங்கல் தினத்தன்று (ஜனவரி மாதம் 15-ந்தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருவதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் ஆணையாளர் நரேந்திர நாயர் பார்வையிட்டார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியா புரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் மதுரை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகிறார் என்ற தகவலை அடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையாளர் நரேந்திர நாயர். விமான நிலையம் மற்றும் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் வாடிவாசல் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் காவல் துணை ஆணையர்கள் ஆறுமுகசாமி, சாய் பிரணித் உதவி ஆணையர் செல்வகுமார், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன் ஆகியோருடன் மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆலோசனை நடத்தினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்