கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் விரைவில் திறந்து வைப்பார்

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் விரைவில் திறந்து வைப்பார்
X

அமைச்சர் தங்கம்மூர்த்தி

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அகழாய்வு மற்றும் புதிதாக அகழாய்வு நடத்துவதற்காக அரசு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது

தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

பாண்டியநாடு பண்பாட்டு மையம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் மேலும் பேசியபோது: ஏற்கெனவே, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அகழாய்வு மற்றும் புதிதாக அகழாய்வு நடத்துவதற்காக 5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தொல்லியல் துறை சார்பில் புதிய முன்னெடுப்புகளை உருவாக்கிடவும், அதன் வாயிலாக தமிழ் பண்பாட்டை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் புதிதாக மூன்று இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள உள்ளது.

தென் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தில் தும்பக்கோட்டையிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் திலுக்கர் பட்டியிலும், அகழாய்வு மேற் கொள்வதற்கு தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. குறிப்பாக, கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு முடிவு பெற்றுள்ள நிலையில், எட்டாம் கட்ட அகழாய்வை தொடர்ந்து நடத்துவதற்கும், உள்ளிட்ட மற்ற இடங்களிலும் அகழாய்வு மேற் கொள்வதற்கும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

கொற்கையில் கடல் ஆய்வுகளின் மூலம் தொல்லியல் கலத்தில் புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளோம். தொல்லியல் துறையும் அருங்காட்சிய துறையும் இணைந்து, சென்னை அருங்காட்சி யகத்தில் ஒரு புதிய கட்டிடம் நவீன வசதிகளோடு உலகத் தரத்தில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கீழடியில் ரூ. 12 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியத்தை முதல்வர் நேரடியாக வந்து விரைவில் திறக்க உள்ளார்.

சிறு தொழில்களை மீட்டெடுப்பதற்கு முதலமைச்சர் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். எங்கேயாவது தொல்லியல் சின்னங்கள் இருந்தால், அங்கு எந்த ஒரு குவாரி பணிகளும் நடைபெறக் கூடாது என மிகக்கடுமையான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. தொல்லியல் சின்னங்களை காப்பாற்றுவது நமது கடமை சேதப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!