மதுரையில் அம்பேத்கர் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்
மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்காக கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் விழா மேடையில் இருந்தவாரு ரிமோட் மூலம் சிலையை திறந்து வைத்தனர். பின்னர் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அம்பேத்கர் முழு உருவ சிலையையும் கல்வெட்டுகளை முதல்வருக்கு திருமாவளவன் காண்பித்தார். பின்னர் முதல்வர் விமானம் மூலம் சென்னை சென்றார். தொடர்ந்து திருமாவளவன் அம்பேத்கரை போற்றும் வீதமாக வீர வணக்கம் செலுத்தினார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு, மதுரையில் நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் அம்பேத்கர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.
நவ புத்தம் என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்தியாவின் மிகச் சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu