தமிழக பட்ஜெட் பகல் கனவு பட்ஜெட் : பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

தமிழக பட்ஜெட் பகல் கனவு பட்ஜெட் : பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து
X

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை

மத்திய அரசு தமிழக அரசுக்கு நிலுவைத்தொகையை முழுமையாக கொடுத்ததால் வருவாய் வந்துள்ளது என்றார் அண்ணாமலை

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி:

தமிழக பட்ஜெட்டை பொறுத்தவரை வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவு பட்ஜெட்..தமிழக அரசின் கடன் தொகை 6 லட்சம் கோடியை தாண்டி செல்கிறது.உள்நாட்டு உற்பத்தி அளவீடு 26% கடன் என்ற அளவில் உள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழகம் மட்டும் தான் அதிக கடன் வாங்கி உள்ளது.7000 கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்ததாக காட்டுகிறார்கள்.இப்படியே இருந்தால், அடுத்தடுத் வருடங்களில் அரசு 80,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும்.தமிழக மக்களை கடுமையான கடன் சுமையில் ஆழ்த்துகிறார்கள்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட்டை அமல்படுத்துவதாக சொல்லிவிட்டு இப்படியொரு பட்ஜெட்டை தாக்கல் செய்வது நியாயமா? தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு 1000 ரூபாய் கொடுப்போம் என கூறியது அரசு,தற்போது அரசு கல்லூரி மாணவிகளுக்கு 1000ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.இதில் எந்த தவறு கிடையாது. ஆனால் ஏற்கெனவே, சொன்ன ஆயிரம் ரூபாயை கூட கொடுக்க முடியவில்லை. 36 மாதங்களுக்கு 5 லட்சம் பேருக்கு 1000ரூபாய் கொடுக்க முடியுமா.தாலிக்கு தங்கத்தை நிறுத்திவிட்டு வேறு திட்டத்திற்கு நிதியை மாற்றி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். இரண்டையும் குழப்புகிறார்கள். தெளிவில்லாத புரிதல் இல்லாத தொலைநோக்கு பார்வை இல்லாத பட்ஜெட். மத்திய அரசு தமிழக அரசுக்கு நிலுவைத் தொகையை முழுமையாக கொடுத்ததால் வருவாய் வந்துள்ளது.

மத்திய அரசு யாருக்குமே நிலுவைத் தொகையை நிறுத்த மாட்டார்கள். எந்த மாநிலத்திற்கும் மத்திய அரசு பாரபட்சம் காட்ட மாட்டார்கள்.எதற்கெடுத்தாலும் மத்திய அரசுச மீது பழிபோடும் நிலையில் பட்ஜெட்டில் எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு நிலுவைத்தொகை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்கள்.நிறைய மத்திய அரசு திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டி திட்டங்களை அறிவித்துள்ளனர்.எந்த பெயர் சூட்டினாலும், தமிழக மக்கள் பயன் பெற வேண்டும்.கடன்சுமையில் இருந்து தமிழகத்தை வெளியே கொண்டு வந்து புதிது புதிதாக வருவாயை பெருக்க வழி ஏற்படுத்த வேண்டும்.

பகல் கனவு காண்கின்ற பட்ஜெட். சம்மந்தமில்லாத பொய்யை சொல்லி தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பட்ஜெட். நிதியமைச்சர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். பிஜிஆர் எனர்ஜிக்கு முதலில் ரெய்டு நடத்த வேண்டும்.பிஜிஆர் நிறுவன ஊழல் தொடர்பாக திங்கள் கிழமை ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். தொடர்ந்து புகார்களை கொடுக்க வேண்டும். கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து கல் எறியக்கூடாது. தயவு செய்து ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வித்தியாசமான அரசு என்பதை நிருபிக்கட்டும்.உங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும் என மக்களுக்கு நம்பிக்கை அளியுங்கள்.

ப.சிதம்பரம் என்ன அர்த்தத்தில் சொன்னார் எனத்தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் துணை பிரதமர் ஆக ஏராளமானோர் கனவு காண்கின்றனர். தமிழக முதல்வரும், மம்தா, பினராயி உள்ளிட்ட ஏராளமானோர் கனவு காண்கின்றனர். போட்டி போடும் கூட்டம் அதிகமாக உள்ளது.400 எம்பிக்களை வைத்து பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றார்.

Tags

Next Story
why is ai important to the future