அவனியாபுரம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

அவனியாபுரம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
X

அவனியாபுரம் மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவனியாபுரம் மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

துப்பரவு பணியாளர் பணி நீக்கத்தை கண்டித்தும், அவனியாபுரம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலைநிறுத்த போராட்டம்.

மதுரை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் மொத்தமுள்ள நூறு வார்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அவனியாபுரம், வில்லாபுரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள வார்டு கவுன்சிலர்கள் நேரடியாக துப்புரவு பணியாளர்கள் வழக்கமாக செய்யும் பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாகும், மதுரை அவனியாபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நிரந்தர பணியாளராக வேலை பார்த்து வந்த மூர்த்தி என்பவரை எந்தவித முன்னிறிவிப்பின்றி பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், மீண்டும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பெண் துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக அதிகாரிகள் பேசுவதாகவும், ஊதியத்தை முறையாக வழங்கக்கோரியும் மாநகராட்சி அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்ட பெண் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவனியாபுரம் ஆரம்ப சுகாதார முன்பு போராட்டத்தில் ஈடுட்ட தூய்மைப் பணியாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மாநகராட்சி அலுவலகமும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் ஒரே வளாகத்தில் செயல்படும் நிலையில் துப்புரவு ஊழியர்களின் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது. துப்புரவு பணியில் இருந்து நீக்கப்பட்ட மூர்த்தி என்பவரை மீண்டும் பணியமர்த்த வில்லை என்றால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறினர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?