மதுரையில் மீனாட்சியம்மன் ஆலய சித்திரைத் திருவிழாவில் சுவாமி திருவீதி உலா
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளில் நடைபெற்ற சுவாமி திருவீதி உலா
மதுரையில் இடி மின்னலுடன் கொட்டிய கோடை மழை காரணமாக சுவாமி வீதி உலா பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.
மதுரையில் , வெப்பச் சலனம் காரணமாக பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், மேலவாச வீதி, தெற்கு மாசு வீதி, கீழமாச வீதி உள்ளிட்ட மதுரை மாநகர் பகுதிகளில் கன மழை பெய்தது.இதனால், சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்தனர்.திடீரென பெய்த மழையால் மேற்கு கோபுரம் செல்லும் சாலையில் வழியாக கோவிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாமியின் வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டது.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி (சித்திரை மாதம் 10-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 4-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது, இதையொட்டி தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெறும். முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30-ல் நடைபெறும். மே 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான மே 2-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணிமுதல் 8.59 மணிக்குள் நடைபெறும். மறுநாள் மே 3-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். மே 4-ம் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும். முக்கிய விழாவான மே 5-ம் தேதி சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu