மதுரை அருகே மாணவர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி..!
வாடிப்பட்டி, ஆக.10.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுபட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப் பள்ளியில் நிறுவனர் பொன்னுத்தாய் நினைவு தினத்தையொட்டி, மாணவர்களின் தனித் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. இந்த பயிற்சி வகுப்பினை, செயலாளர் நாகேஸ்வரன் தலைமைதாங்கினார்.
கவுன்சிலர் கீதா சரவணன், சமூக ஆர்வலர்கள் செல்வராஜ், குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வெங்கட லட்சுமி வரவேற்றார். ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குருசாமி பயிற்சியைதுவக்கி வைத்தார்.பள்ளிக்குழுத் தலைவர் தனபாலன் மாணவர்களின் தனித் திறன் பற்றி விளக்கி பேசினார்.
இந்த பயிற்சி வகுப்பில்,நாடக ஆசிரியர் செல்வம், களிமண் விரல்கள் கலைக்கூட பயிற்சி யாளர்கள் எழில், ரக்சனா ஆகியோர் ஒரிகாமி, நாடகம், பாடல்கள், நடனம் வர்ணம் தீட்டுதல், காகித ஆடை தயாரித்தல், கைவினைப் பொருட்கள் உருவாக்குதல் உள்ளிட்டவைகள் பற்றி 3 நாட்கள் செயல்முறை பயிற்சியளித்தனர்.முன்னதாக, பள்ளி நிறுவனர் பொன்னுத்தாயம்மாள் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியினை, ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் தொகுத்து வழங்கினார். முடிவில், ஆசிரியர் எஸ்தர் டார்த்தி நன்றி கூறினார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும். தொடப்பள்ளிப் பருவத்தில் அளிக்கப்படும் பயிற்சி அவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஒரு பயிற்சியாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu