மதுரை பஸ் நிலையம் அருகே திருடனை விரட்டிப் பிடித்த மாணவர்கள்
மதுரையில் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள்
மதுரையில் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள்
மதுரை மாநகரில் மிக முக்கியமான பேருந்து நிலையமாக உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் செல்போனை வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்களை பள்ளி மாணவர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.
பிடிபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சான் என்ற வாலிபரை சரமரியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.மேலும், மூன்று வட மாநில இளைஞர்கள் தப்பியோடி விட்டனராம்.பட்டப்பகலில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் பெரியார் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
கடந்த சில மாதங்களாகவே, செல் போன், பெண்ணிடம் நகை பறிப்பு, வீட்டின் கதவு உடைத்து நகைகளை திருடியதாக காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்வது ஒரு புறம். மறுபுறம், திருடர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து, பொருட்களை மீட்பது நடந்து கொண்டே இருக்கிறது. திருட்டை தடுக்க மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தப்பட்டு, விழாக் காலங்களில், போலீஸார் இரவு நேர ரோந்துப் பணியும் மேற்கொள்கின்றனர்.
ஆனால், சாலையில் நடைபெறும் செயின் பறிப்பு, வீடுகளில் கொள்ளைகளை தடுக்க தண்டனைகளை அதிகப்படுத்த, அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu