வெள்ளப்பகுதிகளில் மாநில மத்திய பேரிடர் மீட்புக் குழுக்கள்: அமைச்சர் தகவல்

வெள்ளப்பகுதிகளில் மாநில   மத்திய பேரிடர் மீட்புக் குழுக்கள்: அமைச்சர் தகவல்
X

வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தமிழக அரசின் வெள்ளமீப்பு பணியில் ஆறு குழுக்களும், மத்திய அரசின் பேரிடர் மீட்பு பணிகளில் 5 குழுக்களும் பணியில் உள்ளனர்

வெள்ளப் பகுதிகளில் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக தமிழக அரசின் வெள்ள மீப்பு பணியில் ஆறு குழுக்களும், மத்திய அரசின் பேரிடர் மீட்பு பணிகளில் 5 குழுக்களும் மொத்தம் 312 பேர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் கூறியது: கடந்த சில நாட்களாக இரண்டு லட்சம் கனஅடியாக இருந்த காவேரி உபரி நீர் தற்பொழுது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.மேலும் ,அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சை, மயிலாடுதுறை ,கரூர், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 4035 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அரசு சார்பில் உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.காவிரி ஆறு செல்லும் மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு, வெள்ளம் மற்றும் மீட்பு பணியிணை பார்வையிட்டு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் குறித்த கேள்விக்கு:அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது நோக்கம்.ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.சில இடங்களில் பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.மற்றும் அவர்களின் வாழ்வதாரம் பாதிப்பு ஏற்படாத வகையில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்த கேள்விக்கு:மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாத வர வேண்டும் என்பதுதென் மாவட்ட மக்களின் கோரிக்கை யாகும்.அதை நிறைவேற்றும் பொருட்டு உரிய பணிகளை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!