மதுரை அருகே உள்ள பள்ளியில் 100 அடி கொடிக் கம்பத்தை திறந்து வைத்த எஸ்.பி
மதுரை அருகே உள்ள தனியார் பள்ளியில் 100 அடி உயரமுள்ள தேசியக் கொடிக் கம்பத்தை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் திறந்து வைத்தார்.
மதுரை துவரிமான் அருகே உள்ள ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளி, நகரத்தில் உள்ள பள்ளிகளிலேயே முதல் மற்றும் உயரமான 100 அடி தேசியக் கொடிக் கம்பத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் பங்கேற்றார். ஸ்ரீ அரவிந்தோ மீரா பிரபஞ்சப் பள்ளியின் வளாகத்தில் நூறு அடி கம்பத்தில் மூவர்ணக் கொடி ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது .
பள்ளியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எம். சந்திரன் , இயக்குனர் எம்.சி. அபிலாஷ் , பொருளாளர் நிக்கி புளோரா மற்றும் முதல்வர் ஞானசுந்தரி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினரான ஆர்.சிவ பிரசாத் மாணவர்களால் பள்ளி மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பிரமாண்டமான 100 அடி தேசியக் கொடியை ஏற்றினார்.
பள்ளியின் இயக்குநர் எம்.சி.அபிலாஷ் பேசுகையில், மதுரையில் இவ்வளவு உயரமான கொடிக் கம்பத்தை நிறுவிய முதல் நிறுவனம் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னோடி எங்கள் பள்ளி விளங்குவதாகவும் பள்ளியின் இந்த முயற்சி இளைய தலை முறையினரிடையே தேசபக்தி உணர்வை ஊட்டுவதை நோக்கமாகக் கொண்டது. தேசத்தின் மீதான அன்பை வளர்ப்பதில் இது ஒரு முக்கியமான படியாகும் என்றார் அவர்.
சிறப்பு விருந்தினர் மாவட்ட எஸ்பி சிவபிரசாத் பேசுகையில், ஹைதராபாத் போலீஸ் பயிற்சியில் தான் பெற்ற அனுபவங்களால் திறமையுடன் பணியாற்ற முடிகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூகங்கள் மற்றும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கொடிகளில் இந்தியக் கொடி வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக நின்கிறது. மூவர்ணக் கொடியானது பல்வேறு கலாசாரங்கள், மரபுகள், மொழிகள், சமூகங்கள் மற்றும் மாநிலங்களை ஒன்றிணைக்கிறது. தேசியக் கொடியின் உணர்வால் பாகுபாடு மற்றும் வேறுபாட்டைத் களைந்திட முடியும். இந்த தொலை நோக்கு பார்வையை இளைய தலைமுறையினர் ஏற்றுக் கொண்டு தேசத்தின் முன்னேற்றத்திற்காக பெருமையுடன் உழைக்க வேண்டும் என்றார் எஸ்பி சிவபிரசாத்.
பள்ளியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.சந்திரன், சிறப்பு விருந்தினர் ஆர்.சிவ பிரசாத்-க்கு நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பள்ளி மாணவர்கள் நடன நிகழ்ச்சி மூலம் தங்களது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினார்கள். இறுதியாக, முதல்வர் ஞானசுந்தரி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu