திருவேடகத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை..!

திருவேடகத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை..!
X

வேகத்தடை அமைக்கவேண்டிய பகுதி.

சோழவந்தான் அருகே, திருவேடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, திருவேடகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரு ஏடகநாதர் திருக்கோவில் உள்ள நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் வருகிறது. குறிப்பாக, இங்குள்ள சிவன் கோவிலில் முன்னோர்களுக்கு விளக்கு ஏற்றவும், அருகில் உள்ள வைகை ஆற்றில் திதி கொடுக்கவும் ஏராளமான பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர் .

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டதில், வேகத்தடை அமைக்காமல் சென்று விட்டதால், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால்,திருவேடகம் எல்லை காளியம்மன் கோவில் அருகில் சாலையிலும் ஏடகநாதர் திருக்கோவில் செல்லும் வழியில் உள்ள சாலையிலும் இரண்டு வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை ஆடி அமாவாசை நடைபெற நடைபெற உள்ளதால், பொதுமக்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் வரும் என்ற நிலையில், உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது இரண்டு புறங்களிலும் தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை, செய்ய வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏதாவது பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் வேகத்தடை அமைக்கவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture