மதுரையில் மார்ச் 29 ல் யோக சனீஸ்வரருக்கு சிறப்பு யாகம்

மதுரையில் மார்ச்  29 ல்  யோக சனீஸ்வரருக்கு சிறப்பு யாகம்
X

மதுரை மேலமடை தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், யோக சனீஸ்வரன்.

மாதம் தோறும் வளர்பிறை - தேய்பிறை பஞ்சமி நாளன்று காலை 9 மணி அளவில் வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும் நடைபெறுகிறது

மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், வசந்த பஞ்சமியை ஒட்டி, வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

இத் திருக்கோயிலில், வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இதேபோன்று மாதம் தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் பஞ்சமி அன்று காலை 9 மணி அளவில் வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெறுகிறது.

வசந்த பஞ்சமி ஒட்டி, இன்று சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் வராகி அம்மன் சந்நிதி முன்பாக ஹோமங்கள் சண்டி ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வராகி அம்மனுக்கு பக்தர்களால், பால், தயிர், இளநீர், மஞ்சள் போன்ற அபிஷேகத் திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதை அடுத்து, அர்ச்சனை வழிபாடுகளும் ,அதைத் தொடர்ந்து, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இதற்கான ஏற்பாடுகளை, இத்திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர். இத் திருக்கோவிலில் வருகின்ற மார்ச் 29-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி அளவில் கோவிலில், தனி சந்நிதியாக அமைந்துள்ள யோக சனீஸ்வரன் சந்நிதி முன்பாக, சனி பெயர்ச்சி மகாயாகம் நடைபெறுகிறது.

மகா யாகத்தை தொடர்ந்து ,யோக சனீஸ்வரனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்.தொடர்ந்து, மேஷம், துலாம், கும்பம், மகரம், மீனம், உள்ளிட்ட ராசிகளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும்.பக்தர்கள், சனி பெயர்ச்சியை முன்னிட்டு, பரிகாரப் பொருளான, கருப்பு வஸ்திரம் கருப்பு எள்ளு, பூக்கள், ஹோமத்துக்கு நெய் ஆகியவை அளிக்கலாம்.

இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தலைவர் ஜெகதீசன், செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மகளிர் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.இத் திருக்கோவிலில், சனி பகவான், யோக சனீஸ்வரனாகபக்தர்களுக்கு காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில், யோக சனீஸ்வரனுக்கு, எள் தீபம் ஏற்றி வழிபட்டால், சனியின் தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். சனிப்பெயர்ச்சியைஓட்டி, பரிகார அர்ச்சனைகளுக்குகோயிலில் முன்பதிவு செய்யலாம்.

Tags

Next Story
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் - திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேச்சு