வளர்பிறை பஞ்சமியையொட்டி வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை

வளர்பிறை பஞ்சமியையொட்டி  வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை
X

மதுரை அண்ணாநகர் யானை குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், வராகி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்.

வளர்பிறை பஞ்சமியையொட்டி வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மதுரை அண்ணா நகர் ,மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், வளர் பிறை பஞ்சமி விழா நடைபெற்றது. விழா ஒட்டி, கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், சண்டி மகா ஹோமங்கள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, வராகி அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், திரவியப்படி போன்ற பொருட்களை அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு, அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு தீபார நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்த குழு செய்தனர்.

இதே போல, மதுரை அண்ணா நகர் முத்து மாரியம்மன் ஆலயத்திலும், பஞ்சமி முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வராகி அம்மன் அலங்காரம் நடைபெற்றது. இதே போல, தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், பஞ்சமியை முன்னிட்டு, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மன் அலங்காரம் நடைபெற்றது.

மதுரை அண்ணா நகர் தாசிலா நகர் சௌபாக்கியவன ஆலயத்தில், மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில், கோவில் அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு, சிறப்பு ஹோமங்களும் அபிஷேகம் நடைபெறுகிறது .

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.

Tags

Next Story