மதுரை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் நரசிம்மருக்கு சிறப்பு பூஜை

மதுரை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் நரசிம்மருக்கு சிறப்பு பூஜை
X

மதுரை மேலமடை சௌபாக்ய விநாயகர் கோவில்

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் நரசிம்மருக்கு சிறப்பு பூஜை

மதுரை மேலமடை, தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெரு அருகே அமைந்துள்ள சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், சனிக்கிழமை ( ஜூலை. 9.) காலை 9 மணிக்கு நரசிம்மருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனைகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்யா விநாயகர் ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.இதே போல, மதுரை சிவகங்கை சாலையில் கருப்பாயூரணியைடுத்த, ஓடைப்பட்டி கிராமத்தில் சாலையோரமாக, சுயம்பு வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது.பக்தர்கள், அபிஷேக பொருட்கள், பிரசாதங்கள், பூக்கள் கொண்டு வரலாம்.இதற்கான ஏற்பாடுகளை, ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு செய்து வருகின்றனர்.

Tags

Next Story