Special Pooja For India Win World Cup உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற பிரார்த்தனை

மதுரையில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்ட கிரிக்கெட் ரசிகர்கள்.
Special Pooja For India Win World Cup
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது கேப்டன் ரோகித்சர்மா தலைமையில் இதுவரை ௯ போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அத்தனை போட்டிகளிலும் வெற்றி பெற்று அட்டவணையில் முதலிடத்தில் இந்திய அணி உள்ளது. இன்று மும்பையில் நடக்க உள்ள அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியோடு மோதுகிறது. ஏற்கனவே நியூசிலாந்து அணியுடன் லீக்சுற்றில் மோதி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. வலுவான அணியாக திகழும் இந்திய அணி இன்றும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் உலககோப்பையை வெல்லவேண்டும் என மதுரை கிரிக்கெட் ரசிகர்கள் இன்று கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து , மதுரை எஸ்எஸ் காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் இன்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில், பெரியவா விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரை இறுதிப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
Special Pooja For India Win World Cup
இந்திய கிரிக்கெட் அணியானது அரையிறுதிப் போட்டி மற்றும்இறுதிப்போட்டியில் வென்று உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என மதுரை கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தி பிரார்த்தனை செய்தனர்.
இந்நிகழ்வில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ,மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க செயலாளர் எஸ். எஸ். சரவணன், பொருளாளர் கதிரவன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர்.மதுரை கிரிக்கெட் ரசிகர்களின் சிறப்பு பிரார்த்தனை பலிக்கும் வகையில் இந்திய அணியானது அரையிறுதியில் வெற்றி பெற்று உலக கோப்பையை இறுதிப்போட்டியில் வெல்லவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu