மதுரை அருகே திமுக உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்

மதுரை அருகே திமுக உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்
X

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுமென திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் அறிவித்தார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முன்னாள் முதல்வரும், முன்னாள் கழக தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு தொடக்கம், கழக பவள விழா ஆண்டையொட்டி, 'உடன் பிறப்பாய் இணைவோம்' இயக்கம் மூலம், புதிதாக ஏப். 3 முதல் ஜூன் 3 வரை, ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுமென திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்து, சென்னையில் தொடக்கி வைத்தார் .

அதன்படி, மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமையில் நடைபெற்றது. திருவேடகம் தனியார் மஹாலில் முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ மற்றும் தொகுதி பார்வையாளர் சுப.த சி சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர்.

மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் முருகன், சிபிஆர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா என்ற பெரிய கருப்பன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், வசந்த கோகிலாசரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகாவீரபாண்டி, ஊத்துக்குளி ராஜாராம் ,மேலக்கால் ராஜா, மாணவரணி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை