மதுரையில் கிறிஸ்தவ மக்கள் களம் அமைப்பின் தென் மண்டல மாநில மாநாடு
மதுரை ஆனையூரில் கிறிஸ்தவ மக்கள் களம் அமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது.
மதுரை ஆணையூரில் கிறிஸ்தவர்களின் தென் மண்டல மாநாடு நடைபெற்றது.
Madurai,Christian People's Field Organization,Southern Zone State Conferenceகிறித்தவ மக்கள் களம் என்ற அமைப்பு மதுரை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் தென் மண்டல மாநாடு மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தென்மண்டல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டியன் சூசைராஜ் தலைமை வகித்தார். மகளிர் அணி அமைப்பாளர் உமாமகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் அருண், தேனி மாவட்ட செயலாளர் சகாயராஜ் முன்னிலை வகித்தனர். மாநாட்டு துவக்க உரையை ஒருங்கிணைப்பாளர் பெலிக்ஸ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Madurai,Christian People's Field Organization,Southern Zone State Conferenceஇந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் கிறிஸ்தவ மதம் தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 4.5 சதவீதம் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். கிறிஸ்தவர்களுக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடாக தருவதாக ஒப்புக்கொண்ட 3.5 சதவீத நிலையில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் தலித் கிறிஸ்தவர்களுக்கு மாநில அரசு கல்வி, வேலை வாய்ப்புகள், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கு மத்திய அரசின் பட்டியலினை பட்டியலின உரிமையை கிடைக்கும் வரை தமிழக அரசுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
Madurai,Christian People's Field Organization,Southern Zone State Conferenceதமிழக சட்டமன்றத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை வழங்கிட மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானம் மீண்டும் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும், சென்னை மெரினா கடற்கரையில், டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு முழு உருவச் சிலை அமைத்திட வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu