அதிமுகவில் சிலர் செயற்கையாக குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்: ஒபிஎஸ் கருத்து

அதிமுகவில்  சிலர் செயற்கையாக குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்: ஒபிஎஸ் கருத்து
X

முன்னாள் முதல்வர ஓபிஎஸ் (பைல் படம்)

தேர்தல் ஆணையம் மட்டுமல்ல வெளியிலும் பல்வேறு குளறுபடிகள் செயற்கையாக சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது

மதுரையிலிருந்து டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அதிமுகவின் சட்ட விதிகளின்படி கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தான் இந்தோம். தற்போது, முறைப்படி இந்திய தேர்தல் ஆணையம் இன்று வரை அப்படித்தான் கடிதம் அனுப்பி உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவதாக வந்த செய்தி குறித்த கேள்விக்கு, இதுவரை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மட்டுமே கடிதம் அனுப்பி உள்ளது. வேறு எந்த முடிவும் அல்ல. இது குறித்து, தவறான தகவல்களை சிலர் அளிக்கின்றனர். தேர்தல் ஆணையம் மட்டுமல்ல வெளியிலும் பல்வேறு குளறுபடிகளை செயற்கையாக சிலரால உருவாக்கப்பட்டுள்ளது

பரிசு கொடுத்த கேள்விக்கு தமிழக விவசாயிகள் இந்த வருடமும் பொங்கல பரிசாக கரும்பு வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் பயிரிட்டார்கள்.அதை ஏற்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசு 5 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு ,செய்தியாளரிடம் நீங்க எந்த சேனல் என் கேட்டுவிட்டு சிரித்து கொண்டே சென்றுவிட்டார்.

பரவலாக ஓபிஎஸ் என அறியப்படும் ஓ.பன்னீர்செல்வம் , தற்போது தமிழகத்தின் துணை முதல்வராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக 21.08.2017 முதல் பதவி வகித்து வருகி்றார். தமிழகத்தின் 7வது முதலமைச்சராக பதவி வகித்தவர். ஜெயலலிதா இரண்டு முறை நீதிமன்றத்தால் தண்டனை பெற்று பதவியிழந்தபோதும், அவருக்கு பதிலாக தமிழகத்தின் முதல்வராக பணியாற்றியவர். 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 3வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றவர், 2 மாதங்களுக்கு பின்னர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!