மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதை

மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதை
X

இறந்த ராணுவ வீரர் லெக்ஷ்மணன் உடலுக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை:

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த திருமங்கலம் புதுப்பட்டி இராணுவ வீரர் உடல் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது

மதுரை மாவட்டம், திருமங்கலம் தும்மக் குண்டு அருகே உள்ள, டி. புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த தர்மராஜ் - ஆண்டாள் தம்பதியின் இரட்டையர்களின் இளைய மகன் லட்சுமணன், கடந்த 2019 ஆம் ஆண்டு பிகாம் பட்டம் பெற்று , அதே ஆண்டில் இராணுவ பணியில் சேர்ந்தார் .

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் - எல்லை பகுதியான ரஜோரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் லட்சுமணன் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

லட்சுமணன் வீர மரணம் அடைந்த செய்தியினை அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இந்நிலையில் காஷ்மிரிலிருந்து ல்டிலி கொண்டு வரப்பட்ட லட்சுமணன் மற்றும் மூவரது உடல் இராணுவ தலைமையகத்தில் அஞ்சலி செலுப்பட்டு, அங்கிருந்து ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஹைதராபாத்தில் இருந்து இன்று காலை 11:50 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது .

மதுரை விமான நிலையத்தில், வீரமரணம் அடைந்த லட்சுமணன் உடலுக்கு அரசு சார்பில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை ரெஜிமண்ட் பிரிவில் உள்ள கோயமுத்துார் 35வது ரைபில் பிரிவு வெட்டின்ட் கர்னல் சத்யபிரபாத் தலைமையில் 48 இராணு வீரர்கள் மறைந்த வீரர் லட்சுமணனுக்கு தேசிய கொடி அணிவித்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த் , விமான நிலைய இயக்குநர் பாபுராஜ், மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன் காவல்துறை சார்பில் மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில்குமார், மதுரை சரக காவல்துறை துணை தலைவர் பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வுக்கு பின் ,ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்த அவரது உடலை சொந்த ஊரான புதுப்பட்டிக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். அங்கு ,அவருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!