மதுரை அருகே ரேஷன் அரிசி கடத்தல்: 5 பேர் கைது, வேன் பறிமுதல்

மதுரை அருகே ரேஷன் அரிசி கடத்தல்: 5 பேர் கைது, வேன் பறிமுதல்
X

கைது செய்யப்பட்ட கோவிந்தன், சபரி, முத்துப்பாடி, முருகன், சரவணன்.

Ration News Today - சிலைமான் பைபாஸ் வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 115 மூட்டைகளில் 50 கிலோ எடை கொண்ட 5750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

Ration News Today - மதுரை சிலைமான் பைபாஸ் சாலையில் குடிமை பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 115 மூட்டைகளில் 50 கிலோ எடை கொண்ட 5750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ரேஷன் அரிசியை கடத்தியது‌ ராம்நாடு பரமக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, பாபு மதுரையைச் சேர்ந்த கோவிந்தன், சபரி, முத்துப்பாடி, முருகன், சரவணன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. ரேசன் அரிசி கடத்தலில், ஈடுபட்ட உரிமையாளர் ராமமூர்த்தி, பாபு ஆகிய இருவரும் தலைமறைவான நிலையில் மீதமுள்ள 5 பேரை போலீசார் கைது செய்து, 5750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!