மதுரை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவராலும் விரும்பப்படுவது தங்கம். தங்கத்திற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு உண்டு. தங்கம் இல்லாத எந்த கல்யாணமும் தமிழகத்தில் நடக்காது. அந்த வகையில் மற்ற மாநிலங்களை விட தங்கத்திற்கு பெரும் வரவேற்பு இங்கு உண்டு.அதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுவும் நேரடியாக கடத்துவது என்பது ஒரு வகை. பலர் பலவிதமாக தங்கத்தைக் கடத்தி வருவதுதான் ஹைலைட்டான விஷயமே. ஒரு பொருளில் , அல்லது பொருளாக தங்கத்தினாலேயே மாற்றி கொண்டு வருதல் என பல வகைகளிலும் இந்த கடத்தல் பிசினஸ் நடக்கிறது. விமானநிலைய சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகள் இதுபோல் கடத்தி வரும் தங்கத்தை பறிமுதல் செய்துவிடுகின்றனர். அந்த வகையில்
துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, துபாய் பயணி ஒருவரிடம் 1 கிலோ 436 கிராம் தங்கம் இரண்டு பையில் கடத்தி வரப்பட்டதும், அதன் மதிப்பு 91,61,680 ரூபாய் என்பது தெரிய வந்தது.
எனவே, ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கடத்தி வந்த தங்கத்தை விமான நிலைய சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்து துபாய் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu