மதுரை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் தங்கம்

மதுரை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல்  தங்கம்
X

விமானத்தில் கடத்தி வந்த தங்கம், மதுரை விமானத்தில் பிடிபட்டது.

துபாயில் இருந்து மதுரை வந்த பெண் விமான பயணியிடம் 27,86,930 லட்சம் மதிப்புள்ள 458 கிராம் தங்கம் பறிமுதல்:

துபாயில் இருந்து மதுரை வந்த பெண் விமான பயணியிடம் 27,86,930 லட்சம் மதிப்புள்ள 458 கிராம் தங்கம் பறிமுதல்:

துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஜெட் விமானத்தில், தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தகவல் கிடைத்தது. அதன் பேரில், துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகளை சோதனை மேற்கொண்டனர்.

துபாயில் இருந்து மதுரை வந்த திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (42). என்பவர் அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது..தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டதில் 27,86,930 லட்சம் மதிப்பில் 458 கிராம் எடையுள்ள தங்கம் என, தெரிய வந்தது. இந்த தங்கத்தை பறிமுதல் செய்து, தொடர்ந்து பெண் பயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story