வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளில் ஆமை வேகம்: முன்னாள் அமைச்சர் புகார்

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளில் ஆமை வேகம்: முன்னாள் அமைச்சர் புகார்
X

மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Vada Kilakku Paruva Malai -வடகிழக்கு பருவமழையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வில்லை என எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் குற்றச்சாட்டு

Vada Kilakku Paruva Malai -மதுரையில் 3 நாட்களாக பெய்த கன மழை காரணமாக மாட்டுத்தாவணி அருகே பாசன வாய்க்கால்களில் வந்த வெள்ள நீரால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் அப்பகுதிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, மழை நீரால் பாதிக்கப்பட்ட பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும் 50 -க்கும் மேற்பட்ட வட மாநில மக்களை ஆர்.பி.உதயகுமார், நேரில் சந்தித்து தேவையான அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து ஆர்.பி.உதயகுமார் கூறியது: கழக இடைக்கால பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தென்மேற்கு பருவ மழையால் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கு நீர் கிடைக்கும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இது நமக்கு தேவையான நீர் அதிகளவில் கிடைக்கும். இந்த காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காப்பது அரசின் கடமையாகும். அந்த அடிப்படையில்தான் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்.

கடந்த அம்மா ஆட்சி காலத்தில் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து, மக்களின் நலனை கருதி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக, மதுரையில் மூன்று நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது, இதனால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது . குறிப்பாக மாட்டுத்தாவணி அருகே டி.எம்.நகர் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஏறத்தாழ 600 குடியிருப்புகள் தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்று தண்ணீர் சூழ்ந்து இருக்கும் பொழுது, அப்பகுதி மக்களை வெளியேற்றி நிவாரண முகாம்களில் பத்திரமாக தங்க வைக்க வேண்டும். வட கிழக்கு பருவ மழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் அமைக்கவில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை, பலரும் தானாகவே வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமைச்சர்கள் பார்வையிட்டு சென்றாலும், குறிப்பாக 3 நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்து வருவதால் குழந்தைகளுக் கும், வயதானவர்களுக்கும் உணவு தயாரித்துக் கொடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வசதி, தங்கும் வசதி, மருத்துவ வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

அதேபோல், உத்தங்குடி போன்ற பல்வேறு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளாக கூறுகிறார்கள். ஆகவே, தேவையான மணல் மூட்டைகளை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். ஆனால் ,அவர் கூறிய தகவலுக்கும், களத்தில் உள்ள நிலவரத்திற்கும் வேறுபாடு உள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. சென்னையில் மழை வடிகால் இணைப்புப் பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. அந்தப்பணிகளை 10 நாள்களில் முடிப்போம் என்று கூறினார்கள். ஆனால் அது நடக்குமா என்பதில்தான் பிரச்னை உள்ளது.

1 மணி நேர மழைக்கே சென்னை தாங்கவில்லை. சென்னையில் முழு நீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் முழுமை பெறாததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளும், வெள்ளத்தணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டன.ொ

குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள 22,558 ஏரிகள், 12,070 நீர் வழித்தடங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. அதேபோல் 7,030 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் 9,627 பாலங்கள், 1,37.074 சிறு பாலங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யப்பட்டன. இதன் மூலம் கிராமப்புறங்களில் நீர் செல்லாத வண்ணம் பாதுகாக்கப்பட்டன. இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான், கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஆகவே, தமிழக அரசு, கடந்த அம்மா ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே, எந்த உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் இல்லாமல் மக்களை காப்பாற்ற முடியும் என்றார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு