மதுரை விமான நிலையத்தில் விமான வருகை தாமதம்

மதுரை விமான நிலையம்.
Singapore Flight Delay
சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தடையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பகல் 12.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடையும், பின்னர் பயணிகளுடன் ஒன்று 40 மணியளவில் மதுரையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும் இன்று வழக்கமாக 12 40 மணியளவில் வரவேண்டிய சிங்கப்பூர் விமானம் 10 மணி நேரம் தாமதமாக இரவு 11 40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது. சிங்கப்பூரிலிருந்து மதுரை வரும் விமான நிலையத்தில் 139 பயணிகளும் மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்ல 89 பயணிகளும் தயாராக உள்ளனர். இரவு 11:30 மணியளவில், மதுரை விமான நிலையம் வந்தடையும். விமானம் பின்னர் சிங்கப்பூர் செல்லும் பயணிகளை ஏற்றுக்கொண்டு இரவு 12 40 மணியளவில் மதுரையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விமான சேவையில் தாமதம் ஏற்பட்டு வருவதால் பயணிகள் இடையே பெரும் குழப்பமும் தாமதத்தினால் பயணிகளுக்கு ஏற்படும் காலதாமதம் மற்றும் பொருட்செலவு குறித்து விமான நிலையங்கள் பரிசீலனை செய்து உரிய நேரத்தில் புறப்பட கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல், துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று 12:30 மணியளவில் மதுரை வந்தடைந்து, மதுரையில் இருந்து மீண்டும் ஒன்று 40 மணியளவில் துபாய் புறப்பட்டு செல்லும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை விமானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
28 மணி நேரம் தாமதத்திற்கு பின் 181பயணிகளுடன் விமானம் இன்று 7 40 மணியளவில் மதுரையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu