கோயில்களில் சனி மஹா பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் வழிபாடு

கோயில்களில் சனி மஹா பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் வழிபாடு
X

பைல் படம்

மதுரையில் உள்ள சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது

மதுரையில் உள்ள சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது

மதுரை கோயில்களில் சனி மகா பிரதோஷ விழா இன்று மாலை விமரிசையாக நடைபெற்றது. கோயில்களில், மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் துரியோதசி திதி அன்று பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, பிரதோஷ விழாவானது, மாலை 4 மணிக்கு தொடங்கி ஆறு மணி வரை நடைபெறும். கோயில்களில், சனி மகா பிரதோஷ விழாவானது, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மாலை சரியாக நான்கு மணி அளவில் சனி மகா பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றறது.

மதுரை அருகே உள்ள விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும், பிரளயநாத சிவன் ஆலயத்தில், இன்று மாலை 4 மணிக்கு, சனி மகா பிரதோஷம் நடைபெறுகிறது.இதை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரன், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதை அடுத்து, சுவாமி, அம்பாள், ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி, பக்தருக்கு காட்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம். வி.எம். மணி, பள்ளித்தாளாளர் டாக்டர் எம். மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி ஆகியோர் செய்தனர்.

இதே போல , மதுரை அருகே உள்ள திருவேடகம் ஏடாக நாத சுவாமி ஆலயம், தென்கரை மூலநாத சுவாமி ஆலயம், மதுரையில் தெப்பக்குளம் முத்தீஸ்வரன், இன்மையில் நன்மை தருவார், செல்லூர் திருவாப்புடையார் கோவில், மதுரை அண்ணா நகர் சர்வேஸ் ஆலயம், மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில்,சனி மகா பிரதோஷமாக மானது, வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை,மகளிர் குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

இன்று சிவபெருமானை வழிபட்டால், சகல நன்மைகளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும், சனி மகா பிரதோஷ அன்று, நந்திகேஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.பெண்கள் விளக்கேற்றி ஸ்ரீ சிவ பெருமான், நந்தீஸ்வரர் வழிபடுவார்கள்.சனிமகாபிரதோஷத்தையொட்டி, பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture