மதுரை அரசு கலை கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! காய்ச்சலால் பெண் உயிரிழப்பு..! (2 in 1)

மதுரை அரசு கலை கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..!   காய்ச்சலால் பெண் உயிரிழப்பு..!  (2 in 1)
X

பைல் படம்

1. மதுரை அரசு கலை கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை. பேராசிரியர் மீது விசாரணை. 2. காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு -போலீசார் விசாரணை (2 in 1)

மதுரை அருகே அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை. பேராசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை அருகே ஏழுமலை செல்லாயிபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரகுபதி. அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார்.

இவர் மீது தற்காலிக பேராசிரியையாக பணியாற்றும் ஒருவர் ஆஸ்ட்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .அந்த புகாரில் பேராசிரியர் ரகுபதி தன்னை கேலி செய்தும் ஆபாசமாக சில சைகைகளை செய்து தன்னை தொந்தரவு செய்து வருவதாக புகாரரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து ஆஸ்டின்பட்டி போலீசார் பேராசிரியர் ரகுபதிமீது வழக்கு பதிவு செய்து,இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

..................................................................

காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு

மதுரை அருகே திருநகரில் திடீர் காய்ச்சல் ஏற்பட்டு பெண் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை திருநகர் அமைதிச்சோலை நான்காவது தெருவை சேர்ந்தவர் ஜோதி.(40). இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவருக்கு திடீரென்று காய்ச்சல் வந்து மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய அண்ணன் தர்மர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காய்ச்சல் வந்து இறந்துபோனாரா..அல்லது மன அழுத்தம் இருந்ததால் தற்கொலை செய்துகொண்டாரா அலலது கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசால் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!