சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி
X

30-வது வார்டு சௌபாக்யா விநாயகர் ஆலய தெருவில் சாலையில் ஓடும் கழிவுநீர்.

குடியிருப்பு பகுதி சாலையில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறுவதால் நோய் தொற்று அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பைபாஸ் சாலை, கேஎஃப்சி எதிர்புறம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடிக்கடி வெளியேறி சாலை முழுவதும் செல்வதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் அரை குறையாக வேலை செய்வதால், இதுபோன்று நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

இதேபோல், மதுரை நகரில் 30-வது வார்டு சௌபாக்யா விநாயகர் ஆலய தெருவில், கழிவு நீர் வாய்க்கால் அடிக்கடி வெளியேறி குடியிருப்புகளின் வாசல்களை சுற்றி வளைக்கிறது. கடந்த பல மாதங்களாக, இந்த செயல் நடைபெறுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளரிடம் குடியிருப்போர் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர். எனவே, மதுரை மாநகராட்சி ஆணையாளர் துரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!