ம்துரை விமான நிலையத்தில் வாலிபரிடம் 900 கிராம் தங்கம் பறிமுதல்: சோதனையில் அதிகாரிகள் அதிரடி

ம்துரை விமான நிலையத்தில் வாலிபரிடம் 900 கிராம் தங்கம் பறிமுதல்: சோதனையில் அதிகாரிகள் அதிரடி
X

மதுரை விமான நிலையம் முகப்பு தோற்றம்.

இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த வாலிபரிடம் ரூ.46 லட்சம் மதிப்புடைய 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர்.

மதுரைக்கு இலங்கையில் இருந்து வரும் விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசி தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, துபாயில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்து இலங்கையில் இருந்து மதுரை வந்த ராமநாதபுரம் மாவட்டம்இளையான்குடி பகுதியை சேர்ந்த பயணியின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பயணியை சுங்க இலாகா வருவாய் நுண்ணறிவு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். மேலும் அவருடைய உடமைமகளை பரிசோதித்தனர்.

இந்த பரிசோதனையில், அவரிடம் இருந்து ரூபாய் 46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 900 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் ,அவரிடம் ஏதேனும் கடத்தல் தங்கம் உள்ளதா? என்பது குறித்தம், இதற்கு முன்பும் இதேபோல கடத்தலில் ஈடுபட்டரா? அவருக்கு உதவி செய்யும் நபர்கள் யார்? என்பது குறித்தி மதுரை சுங்க இலாக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில், மதுரை விமான நிலையத்தில் பயணியிடம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!