ஆங்கிலம் மூலம் தான் உலகத்தை பார்க்கமுடியும்: தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம்

ஆங்கிலம் மூலம் தான் உலகத்தை பார்க்கமுடியும்: தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம்
X

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க நிறுவனர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்

இதில் ஸ்மார்ட் என்ற நிறுவனத்தின் சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது.

மதுரையில் தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் சங்கம் இணைந்து நடத்திய தனியார் பள்ளி தாளாளர்களுக்கான கருத்தரங்கம் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க நிறுவனர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது .இந்த கருத்தரங்கத்தில், ஸ்மார்ட் என்ற நிறுவனத்தின் சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:.விண்ணப்பித்த அனைத்து பள்ளிகளுக்கும் தடையின்றி நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.டிடிசிபி யில் உள்ள குளறுபடிகளை நீக்கி உடனடியாக டிடிசிபி யை நிர்பந்திக்காமல் அனைவருக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

மேலும் , அந்தந்த வருடத்திற்கான ஆர்டிஐ தொகை அந்தந்த வருடத்திற்கே தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும், ஏனென்றால், முதல் வருடம் வழங்கிய அதே மாணவர்களுக்கு தான் அடுத்த வருடமும் வழங்கப்படுகிறது உடனடியாக வழங்கப்பட வேண்டும் .

மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் வேறு பள்ளிகளில் சேர்க்கக்கூடாது, மாற்றுச் சான்றிதழ் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.பள்ளி வாகன இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகை என்பது அதிகமாக இருக்கின்றது, காப்பீட்டுத் தொகையை பள்ளி வாகனங்களுக்காக குறைத்துக் கொடுத்து, 25% காப்பீட்டு தொகையிலிருந்து விலக்களிக்க வேண்டும்

அந்த சுகாதாரச் சான்றிதழ் தீ தடுப்புச் சான்றிதழ் இவையெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வாங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறது, வருடத்திற்கு ஒரு முறை என்பது மிக சீக்கிரமாக முடிந்து விடுகின்ற காரணத்தினால் மூன்று வருடத்திற்கு ஒருமுறை என்று கட்டட உறுதிச் சான்று வாங்குகின்ற நிலை போல சுகாதாரச் சான்றையும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்று மாற்றியமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

ஆங்கிலத்தின் மூலமாகத்தான் உலகத்தை பார்க்க முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க நிறுவனர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது, அரசு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றது, அதில் எந்தவித மாற்றமும் இல்லை. மீண்டும் எங்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சொல்கின்றோம்

புதிய கல்வி கொள்கை பற்றிய கேள்விக்கு: மத்திய அரசால் நிர்ணயம் செய்திருக்கிற புதிய கல்விக் கொள்கையிலுள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வதற்காக தமிழக அரசு தமிழகத்திற்கு என்று ஒரு கல்விக் கொள்கையை நிர்ணயிப்பதற்காக ஒரு கமிட்டி அமைத்து இருக்கிறது, அந்த கமிட்டி மூலமாக கருத்து கேட்டு கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அந்த கூட்டங்களில் தனியார் பள்ளி தாளாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தோம்,.இந்த கருத்துகள் வாயிலாக ஒரு முடிவு எட்டப்படும் என்று நினைக்கின்றோம் .

தாய்மொழி கல்வி மூலமாக கல்வி கற்கின்ற பொழுது தான் அங்கே நிச்சயமாக ஆராய்ச்சி மனப்பான்மை அதிகமாக இருக்கும், அதே போல இணைப்பு மொழி என்று வருகின்ற பொழுது ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என்பதில் ,எங்களுக்கு எந்த விதமான மாறுபட்ட கருத்தும் கிடையாது.

ஆங்கிலம் கட்டாயமாக இருக்க வேண்டும், ஆங்கிலத்திற்கு பதிலாக வேறு ஒரு மொழியை தனியார் பள்ளிகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால், ஆங்கிலத்தின் மூலமாகத்தான் உலகத்தை பார்க்க முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை, அதன் மூலமாகத்தான் நமது மாணவர்கள் உலகத்தில் உள்ள அத்தனை இடங்களுக்கும் சென்று இன்றைக்கு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, புதிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய நல்ல அம்சங்களை என்னவெல்லாம் எடுக்க முடியுமோ அதை மட்டும் தமிழக தனியார் பள்ளிகள் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுக்கும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!