மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு:

குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
மதுரை விமான நிலையத்தில் ,75- வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலைய உள் வளாகம், வெளி வளாகம், அதிவிரைவு அதிரப்படை என மூன்று பிரிவுகளும் தமிழக காவல்துறை சார்பில் வெளி வளாகம் மற்றம் பாதுகாப்பு பணியில் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்தனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு , மோப்ப நாய்கள் மூலம் பயணிகள் உடமை சோதனை செய்யப் பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு வரும் 30ம் தேதி வரை பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu