மதுரை அருகே குட்கா, புகையிலை விற்ற கடைக்கு சீல்

மதுரை அருகே குட்கா, புகையிலை விற்ற கடைக்கு சீல்
X

கடைக்கு சீல் வைக்கும் வருவாய்த்துறையினர்.

திருப்பரங்குன்றம் அருகே எச்சரிக்கை மீறி புகையிலை, குட்கா விற்பனை செய்த கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் லதா என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார், கடையை சோதனையிட்டனர். அப்போது, புகையிலை பொருடகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

ஏற்கனேவ, பலமுறை போலீசார் எச்சரித்தும், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்தும் உள்ளனர். பின்னரும், தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததால், திருப்பரங்குன்றம் தாலுகா வட்டாட்சியர் உத்தரவின் பேரில், திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுசியா மனோகரி தலைமையிலான போலீசார் கடைக்கு சீல் வைத்தனர்.

இந்த சோதனையில், திருப்பரங்குன்றம் தாலுகா துணை தாசில்தார் ராஜேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!