Sapling Issued To School Students மதுரை அருகே அலங்காநல்லூரில்பள்ளி மாணவர்களுக்கு மரக் கன்றுகள் விநியோகம்

Sapling Issued To School Students  மதுரை அருகே அலங்காநல்லூரில்பள்ளி மாணவர்களுக்கு மரக் கன்றுகள் விநியோகம்
X

அலங்காநல்லூரில், பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விநியோகம் செய்யப்பட்டது.

Sapling Issued To School Students அலங்காநல்லுாரில் யங் இந்தியா அமைப்பு சார்பாக பள்ளி மாணவிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.

Sapling Issued To School Students

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பயிலும் மாணவிகளுக்கு தலா ஒரு மரக்கன்று என்ற அடிப்படையில் யங் இந்திய அமைப்பு சார்பாக 1500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாறிவரும் இயற்கை சூழ்நிலையை மாற்றுவதற்கு இளம் தலைமுறையால் மட்டுமே முடியும் என்ற ஒரே நோக்கத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு யங்இந்திய அமைப்பு சார்பாக இதுவரை 12,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

இதன் அடிப்படையில், அலங்காநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1500 மாணவிகளுக்கு தலா ஒரு மரக்கன்று விகிதம் மாணவிக்கு ஒரு மரக்கன்று என்ற திட்டத்தின் மூலம் நேற்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தற்பொழுது, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டத்திற்கும் மண் பொழிவிற்கும் ஏங்கி நிற்கும் காலம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, மழைப்பொழிவு குறைந்து வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்று வருகிறது .எனவே, வரும் கால தலைமுறைக்கு தேவையான குடிநீரையும் இயற்கை சூழலையும் உருவாக்குவதற்கு இன்றைய மாணவ மாணவிகளால் மட்டுமே முடியும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்லூரிகளில் மரக்கன்றுகள் வழங்கி அவற்றை வளர்ப்பதற்கான நோக்கத்தையும் அதனுடைய அடிப்படை சித்தாந்தத்தையும் மாணவ மாணவிகள் மூலம் இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தோறும் வழங்கி வருவதாக யங் இந்திய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், யங்இந்தியா அமைப்பின் காலநிலை மற்றும் பருவநிலை மாற்ற தலைவர் பொன் குமார் தலைமையில்வன சரகர் முத்து மணி, சமூக ஆர்வலர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள் உள்ளிட்ட ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story