மதுரை பகுதி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

மதுரை பகுதி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
X

மதுரை அண்ணாநகர், யானைக்  குழாய்  முத்துமாரியம்மன் ஆலயத்தில், விநாயகருக்கு நடந்த சங்கடஹரசதுர்த்தி விழா.

மதுரை பகுதி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு , விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பங்கேற்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், மதுரை மேலமடை தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், சந்தான, சௌபாக்யா விநாயகருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!