காந்தி ஜெயந்தியன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தகுதி இல்லை: வைகோ

காந்தி ஜெயந்தியன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தகுதி இல்லை: வைகோ
X

மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ

மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது

காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடந்த ஆர்.எஸ்.எஸ். க்கு தகுதி இல்லை,சமூக நீதி சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற வகையில் ஸ்டாலின் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார் என்றார் மதிமு க பொதுச் செயலாளர் வைகோ.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

போராட்டங்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான கேள்விக்கு:மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது, வெள்ள காலங்களிலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக நலம் கருதி பல தொண்டாற்றி இருக்கிறது .ஆனால் சில இடங்களில் நடந்த வன்முறையை காரணம் காட்டப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விக்கு:தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரி உயர்வை குறைத்திருக்க வேண்டும்.

மேலும் ,தமிழக முதல்வர் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற வகையிலே நடவடிக்கைகள் எடுத்து சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி குறித்த கேள்விக்கு: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதி இல்லை என்றார் வைகோ.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!