மதுரை அருகே காவலர் வீட்டில் நகை பணம் கொள்ளை

மதுரை அருகே  காவலர் வீட்டில் நகை பணம் கொள்ளை
X

பைல் படம்

மதுரையில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோயுள்ளன

மதுரை அருகே சிறைக்காவலர் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, சிக்கம்பட்டி நடராஜ் நகரை சேர்ந்தவர் குணசேகரன்(43.). இவர் மதுரை மத்திய சிறையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மதுரை ஆவினில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். கணவன் மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். மாலை வீட்டாற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு அடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள், பணம் ரூபாய் 2 லட்சத்தை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் குணசேகரன் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையரை தேடி வருகின்றனர்.

கருப்பாயூரணியில் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

மதுரை, கருப்பாயூரணி ஸ்ரீ கங்கைபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் போஸ் மகன் காவேரி(41.)இவர் சொந்த ஊர் திருப்புவனம்.கருப்பாயூரணியில் வாடகைவீட்டில் குடியிருந்து வருகிறார்.இவர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார்.பின்னர் இவரது வீடு உடைக்கப்பட்டிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது .அவர் கருப்பாயூரணி வீட்டிற்கு விரைந்து வந்தார் .அங்கு வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது.வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ2 லட்சத்து 69 ஆயிரம் த்தையும் சில்வர் கொலுசு ஒரு ஜோடி, சில்வர் வளையல் ஒரு ஜோடி முதலியவைகளை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து காவேரி கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

திருநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செல் பறிப்பு

மதுரை உலகநேரி மிர்துன் ஜெயின் மனைவி சித்ராதேவி(30.). இவர் திருநகர் அண்ணா பார்க்க அருகே நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்த இரண்டு ஆசாமிகள் அவரிடமிருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சித்ராதேவி திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் வாலிபரை தாக்கி செல்போன் பணம் பறிப்பு: இரண்டு பேர் கைது

மதுரை திருப்பரங்குன்றம் சந்திராலயம் முதல் தெருவை சேர்ந்தவர் திலகர் மகன் சுரேஷ்(36.) அவரது உறவினர் கணேசன். இவர் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர் .இதில் கணேசன் மயங்கி விழுந்தார். அவரிடம் இருந்த செல்போனையும் ரூபாய் 600ஐயும் அந்த வாலிபர்கள் பறித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கணேசனின் உறவினர் சுரேஷ் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பின்னர் வாலிபரை தாக்கி மயக்கமடைய செய்து செல்போன், பணம் பறித்த திருப்பரங்குன்றம் படப்பட்டி தெருவை சேர்ந்த இளையராஜா(43,)தனக்கன்குளம் கிழக்குபகுதி ஈஸ்வர(45 )இருவரையும் கைது செய்தனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!