மதுரை அருகே சாலையை சீரமைக்காத மாநகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்

மதுரை அருகே சாலையை சீரமைக்காத மாநகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்
X

மதுரை அருகே விளாங்குடியில் ,சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

பழுதான சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் குண்டும்குழியுமான சாலையில் லாரியின் சக்கரம் சிக்கியதால் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்ட நிலையில், பழுதான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விளாங்குடி நேருஜி பிரதான சாலை என்பது குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், பாதாளசாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால், அவ்வழியாக சென்ற லாரி ஒன்றின் டயர் குழியில் சிக்கி ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது.

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனால், அப்பகுதி மக்கள் இதுபோன்ற சம்பவம் விளாங்குடியில் தொடர்கதையாகவே உள்ளதாகவும், சேரும் சகதியுமான சாலையில் நடந்துக்கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மழைக் காலங்களில் இப்படியான சாலைகளால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

மதுரை நகரில் பல இடங்களில் இதுபோல் சாலைகள் படு மோசமாக உள்ளது. இரவு நேரங்களில் மதுரை நகரில் தெருக்களில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.இது குறித்து மாநகராட்சி மேயர், ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் உடனடியாக பார்வையிட்டு, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story