மதுரை அருகே சாலை விபத்து: தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

மதுரை அருகே சாலை விபத்து: தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு
X

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி கார் மீது அடித்து  தீயை அணைத்தனர். 

Road Accident Near Madurai மதுரை அருகே லாரி மீதுமோதி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கார் கவிழ்ந்ததால் திடீரென தீப்பற்றிக்கொண்டது. பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

Road Accident Near Madurai

தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் அண்மைக்காலமாக தீப்பிடித்து எரியும் சம்பவம் அதிக அளவில் நடந்து வருகிறது. காரணம் பல ஓட்டுனர்களின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கும் போது, வாகனங்களை இயக்கும்போது யாரும் செல்போன் பேச வேண்டாம் என தினந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் ஒரு சில டிரைவர்கள் காதில் வைக்கும் செல்போனை எடுக்காமலேயே வாகனங்களையும் இயக்குகின்றனர். இதனால் அவர்களுடைய சிந்தனை சிதறி இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். தயவு செய்து யாரும் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள்...உங்கள் உயிர் உங்கள் கையில்.

மதுரை கார் லாரி மோதி தீ விபத்து ஏழு பேர் காயம் அடைந்தனர்.மதுரைமாவட்டம், மேலூர் அருகே வலைச்சேரிபட்டி நான்கு வழிச்சாலையில், சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரை வந்துவிட்டு,பின் மீண்டும் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

Road Accident Near Madurai


அப்போது, வலைச்சேரிபட்டி நான்கு வழிச்சாலையில் முன்னே சென்ற வைக்கோல் ஏற்றி சென்ற லாரி திடீரென திரும்பியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.இதனைக் கண்ட, அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அதற்குள் கார் திடீரென தீ பற்றி எரிய துவங்கியது.

தீ மளமளவென பிடித்து எரிந்ததால் உடனடியாக கொட்டாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் தண்ணீர் பிய்ச்சி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரில் வந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சிறுசிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து குறித்து, கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story