மதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

Madurai News Today - மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்துஆய்வுக் கூட்டம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர்- அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை டாக்டர்.பி.சந்திரமோகன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் முன்னிலையில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் டாக்டர்.பி.சந்திரமோகன தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் இருப்பிடச் சான்று வருமானச் சான்று பிரிவுச் சான்று ஆதரவற்ற விதவைச் சான்று உள்ளிட்ட அடிப்படைச் சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அலுவலர்கள் இத்தகைய சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்.
அடிப்படைச் சான்றிதழ் தொடர்பாக நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்திட வேண்டும். சரியான காரணமின்றி விண்ணப்பங்களை நிராகரிக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, மாதாந்திர உதவித் தொகை மற்றும் பட்டா ஆணை தொடர்பான விண்ணப்பங்கள் மீதும் அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்திட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும். அரசு திட்ட செயல்பாடுகள்,புதிய திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் நிர்வாக ரீதியாக ஏற்படும் சிரமங்களை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை டாக்டர்.பி.சந்திரமோகன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், இணை இயக்குநர்கள் (வேளாண்மை) விவேகானந்தன், (மருத்துவநலப் பணிகள்) வெங்கடாசலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இந்துமதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.கார்த்திகா உட்பட வருவாய் கோட்டாட்சியர்கள் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu