அடையாள அட்டை வைத்திருக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வீடு வழங்க கோரிக்கை

அடையாள அட்டை வைத்திருக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வீடு வழங்க கோரிக்கை
X

நலத்திட்ட உதவிகளை வழங்கும் அப்துல் கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்.

திருப்பரங்குன்றத்தில் கிராமிய கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், அப்துல் கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிராமிய கலைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வசிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கோடு கலாம் விஷ் விஷன் இந்தியா மூலம் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. கலைஞர்கள்தான் இந்த நாட்டின் முதல்வராக ஆகியுள்ளனர்‌.

தற்பொழுது, அவர்களுக்கு அடிப்படை வசதியான வீட்டு மனை ஒதுக்கித்தர முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

விழாவில் பெண்கள் உள்பட 170 பேர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்றுச் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!