மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பிரதமர் அறிவிக்க கோரிக்கை

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பிரதமர் அறிவிக்க கோரிக்கை
X

விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர்

12ஆம் தேதி மதுரைக்கு பிரதமர் வரும்போது பொங்கல் பரிசாக மதுரை மக்களுக்கு அதனை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பிரதமர் அறிவிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரைக்கு வருகை தரவுள்ள பாரதப்பிரதமர் மோடி மதுரை மக்களுக்கு பொங்கல் பரிசாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: மதுரைக்கு பிரதமர் மோடி வருகை தருவதை ஒட்டி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்பது குறித்து அவருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அக்கடிதத்தில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஏற்கெனவே, அனுப்பிய பதில் கடிதத்தையும் அந்த கடிதத்தோடு இணைத்து அனுப்பியுள்ளேன். எனவே ,கேபினெட் அமைச்சர்கள் அழைத்து மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு முடிவு எடுத்து வருகின்ற 12ஆம் தேதி மதுரைக்கு பிரதமர் வரும்போது பொங்கல் பரிசாக மதுரை மக்களுக்கு அதனை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

விஜயதசமி , தீபாவளி போன்ற விழாக்களுடன் மோடியின் பெயரை இணைத்து கொண்டாடுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கும்போது, தை மாதத்தில் கொண்டாட வேண்டிய பொங்கலை மார்கழி மாதத்தில் மோடி பொங்கல் என கொண்டாடப்போவதாக கூறுவது காமெடி வேறு எதுவும் இல்லை. விளம்பரத்திற்காக இதை செய்கிறார்களா என்பது தெரியவில்லை. தைப்பொங்கலை மார்கழியில் நடத்திவிட்டு அதற்குப் பெயர் மோடி பொங்கல் என்று கூறுவது வருத்தமான செயல்.

சிவகாசி வெடி விபத்து குறித்த கேள்விக்கு: பட்டாசு தொழில் பாதுகாப்பான தொழிலாக இருக்க வேண்டும். ஏழை தொழிலாளிகள் உயிர் இழப்பது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று உரிய விதி முறைகளை பின்பற்றுவதால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை அதிகாரிகள் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் . அதேபோல இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டும்.

மோடியின் வருகை குறித்து செல்லூர் ராஜூ கூறியிருப்பது குறித்த கேள்விக்கு: தமிழக அரசின் நலன்களில் மத்திய அரசு எதுவும் செய்யாததால் அதனுடைய விளைவாக கோபேக் மொடி என்ற ஹேஸ்டேக் வந்தது. அதனால் திமுகவின் அப்போதைய கூட்டணிக் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கோபேக்மோடி என்கிற ஹேஸ்ஸ்டாக்கிற்க்கு ஆதரவளித்தோம். ஆனால், தற்போது அரசு விழாவில் கோபேக் மோடி என்று சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும். ஆகவே ஆட்சியிலிருக்கும் திமுகவின் நோக்கம் தமிழர்களுக்கான சலுகைகளைப் பெறுவதில் மட்டுமே இருக்கும்.

இதனை செல்லூர் ராஜூ போன்ற முன்னாள் அமைச்சர்கள் உணர வேண்டும். பொங்கல் பரிசில் உதவித்தொகை அறிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு: 15ஆம் தேதி தான் பொங்கள் அதற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம். திமுகவம் சரி, அதிமுகவும் சரி பொங்கலுக்கு பரிசு வழங்குவது என்பதை உருவாக்கியவர்கள்.

அதனால், இந்த வருடமும் பரிசு இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டிருந்தால் வெள்ள நிவாரண நிதி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு: தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளையாக வெள்ள நிவாரணத்தில் பார்க்காமல் குஜராத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போல தமிழகத்திற்கும் கொடுக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சி நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளோம்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது போடப்பட்ட வழக்குகள் குறித்த கேள்விக்கு: ராஜேந்திர பாலாஜியை பொருத்தவரை ஆடிய ஆட்டத்திற்கும், அதிகார போதையில் செய்த அலங்கோலங்களுக்கும் தற்போது, பிராயச்சித்தம் தேடி வருகிறார்.தமிழக காவல்துறை அவரை தேடிப்பிடித்து சட்டத்திற்கு முன்பாக நிறுத்தம் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

மதுரை எய்ம்ஸ் அமைவது குறித்த கேள்விக்கு:இது குறித்து, ஜப்பான் பிரதமரிடமும்,ஜப்பான் நிறுவனம் ஜமைக்காவிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் தெளிவாக கூறி விட்டார்கள் 2026ல் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என்று. அதனால் நாம் 2026 வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக காத்திருக்க வேண்டியது நமது கடமை.எனவே, ஜப்பான் பிரதமரையும், ஜமைக்க நிறுவனத்தையும் நம்புவோம். மோடியையும், மோடி அரசையும் நம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வு குறித்த கேள்விக்கு:அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் எதிர்ப்புகளுக்கு இணங்க தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை வாபஸ் பெற வேண்டியது கட்டாயம்.இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்வார் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!