அவனியாபுரம் ஐல்லிக்கட்டு தொடர்பாக வி.ஏ.ஒ. அலுவலகம் முற்றுகை

அவனியாபுரம்  ஐல்லிக்கட்டு தொடர்பாக வி.ஏ.ஒ. அலுவலகம் முற்றுகை
X

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம கமிட்டி உறுப்பினர்கள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை கிராம கமிட்டி உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டி உறுப்பினர்கள் அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகை:

மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் கிராம கமிட்டி நிர்வாகிகளிடம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்படாதால் தொடர்ந் து கிராம நிர்வாக அலுவலக வாயிலில் கிராம கமிட்டியினர் அமர்ந்தனர்.

தைப்பொங்கல் அன்று நடைபெறும் மதுரை அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான சமாதானக் கூட்டம் நாளை (30.12.2022) மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தில் நடைபெறுகிறது. இந்த அமைதி கூட்டத்தில் அவனியாபுரம் பகுதியில் இல்லாத நபர்களுக்கும், இறந்தவர்களும் உள்ளதால், அவர்களை நீக்கிவிட்டு புதிய கிராம கமிட்டி அமைக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி, அவனியாபுரம் கிராம வருவாய் ஆய்வாளர் பிருந்தா மற்றும் காவல் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து, அவனியாபுரம் கிராம கமிட்டி சட்ட ஆலோசகர் அன்பரசு கூறுகையில்: அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனு மீது விசாரணைக்கு அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அமைதி கூட்டத்திற்கான குழு உறுப்பினர்களை அறிவித்துள்ளனர். அதில், இறந்த உறுப்பினர்கள்| மற்றும் கிராம கமிட்டிக்கு சம்பந்தமில்லாதவர்கள் பெயர் இருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இது குறித்து, தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி புதிய கிராம கமிட்டி அமைக்கவும் ஏற்பாடு செய்யும்வரை தொடர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா