திருப்பரங்குன்றத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருப்பரங்குன்றத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
X

அழுகிய நிலையில் காணப்படும் ஆண் சடலம். 

திருப்பரங்குன்றம் அருகே பாழடைந்த கட்டிடத்தில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ரயில்வே தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், இவர் முயல் பிடிப்பதற்காக, திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோமசுந்தரம் காலனி பகுதியில் பழைய பாழடைந்த கட்டடத்திற்கு சென்றார்.

அப்போது, பாழடைந்த கட்டடத்தின் நடுவே சென்ற போது அங்கு முழுவதும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற பிரசாத், உடனடியாக திருப்பரங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் மற்றும் திருப்பரங்குன்ற சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார் இறந்த நபர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்