"ஸ்டாலினை சந்தித்ததாக நிரூபித்தால் அரசிலை விட்டு விலக தயார்"-ஓ.பன்னீர்செல்வம் சவால்

ஸ்டாலினை சந்தித்ததாக நிரூபித்தால் அரசிலை விட்டு விலக தயார்-ஓ.பன்னீர்செல்வம் சவால்
X

ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்த காட்சி.

OPS News Today -"ஸ்டாலினை சந்தித்ததாக நிரூபித்தால் அரசிலை விட்டு விலக தயார்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

OPS News Today -ஒற்றை தலைமை பிரச்சனையால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தையும் அவருடைய ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். ஆனால் அதை ஒ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து நாங்கள் தான் அ.தி.முக. என்று கூறிவருகிறார். இந்த பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரும் கோர்ட்டில் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரமும் வெடித்துள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக தற்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். அவரை மாற்றி விட்டு உதயக்குமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். அ.தி.மு.க. கட்சி தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருவதால் இந்த மனு மீது முடிவு எடுக்காமல் சபாநாயகர் நிலுவையில் வைத்து உள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து புதன்கிழமை அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, 'ஓ. பன்னீர்செல்வத்தை பயன்படுத்தி அ.தி.மு.க.வை வீழ்த்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஸ்டாலினும், ஓ.பன்னீர் செல்வமும் அரை மணிநேரம் சந்தித்துப் பேசினர் என்ற குற்றச்சாட்டை தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் நேற்று வந்தார். அப்போது அவரை நிருபர்கள் சந்தித்து, "நீங்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளாரே" என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், "முதல்வர் ஸ்டாலினை, நான் சந்தித்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார். இதை நிரூபிக்க தவறினால் எடப்பாடிபழனிசாமி பதவி விலக தயாரா?" என்றார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுக சாமி ஆணைய இறுதி அறிக்கை பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கும் போது, "ஆறுமுகம் சாமி ஆணையும் வழங்கிய தீர்ப்பு குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளனர். அதனால் அது பற்றி கருத்து கூற முடியாது" என்றார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வை தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கினார். அம்மாவும், 30 ஆண்டுகாலம் கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று பல தியாகங்களை இந்த இயக்கத்திற்காக செய்துள்ளார். இந்த இயக்கத்தின் 50 ஆம் ஆண்டுவிழாவை தொண்டர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், விரும்பத்தகாத பிரச்சனைகளை யார் உருவாக்கினார்கள் என்பது நாட்டு மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு பெரிய செயலை, பாவத்தை செய்துவிட்டு அடுத்தவர்கள் மீது பழி போடுவது என்பது ஏற்புடையது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பொதுவாக, ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார்? என்றும் நம்பிக்கை துரோகம் செய்தது யார்? என்பதும் நாட்டு மக்களுக்கும், அரசியல் தெரிந்தவர்களுக்கும் நன்றாக தெரியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்னைப் பற்றி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும் தொண்டர்களை பற்றி எனக்கும் நன்றாக தெரியும் எப்போதும் நான் அவர்களுடன் இருப்பேன்.

இவ்வாறு ஒ.பன்னீர்செல்வம் கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil