இலங்கையிலிருந்து மதுரைக்கு வந்த ராமர் பாதூகைக்கு சிறப்பான வரவேற்பு
இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பளிக்கப்பட்டது.
அயோத்தியில் வரும் ஜனவரி மாதம் இருபத்திரண்டாம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி,பல்வேறு நகரங்களில் இருந்து ராமர் கோவிலுக்கு சிறப்பு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனையொட்டி, ராவணனால் இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க ராமர் இலங்கை சென்ற நிகழ்வை முன்னிட்டு, இலங்கையிலிருந்து ஸ்ரீ ராமர் பாதுகையை உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் சாவந்த் விமானம் மூலம் மதுரைக்கு .எடுத்து வந்தார்.
மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஸ்ரீராமர் பாதுகைக்கு, பாஜகவினர் ஹிந்து முன்னணி பரிசத் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மற்றும் ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து மாலைகள் அணிவித்து வணங்கி சென்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் முடித்து நாளை ராமேஸ்வரம் கோவிலில் ஸ்ரீ ராமர் பாதுகைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.பின்னர் அதைத் தொடர்ந்து, ராமர் பாதுகை யாத்திரையாக புறப்பட்டு எட்டு மாநிலங்கள் வழியாக அயோத்தி சென்றடையும் என நிர்வாகிகள் கூறினர். சுரேஷ் சவந்த் கடந்த பத்து தினங்களுக்கு முன் இலங்கை சென்று ராமர் பாதுகையுடன் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu