மதுரையில் ரஜினி ரசிகர்கள் மது போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

மதுரையில் மதுபோதை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்ட ரஜினி ரசிகர்கள்
ஜெயிலர் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் மது அருந்த மாட்டேன் என மது போதையில் ரசிகர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிறது. ரஜினியின் 169 வது படம் வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மதுரையில் நகரில் 20 திரையரங்குகளிலும், புறநகரில் 8 திரையரங்குகள் என 28 திரையரங்குகளில் ஜெயிலர் வெளியாகிறது.
ஜெயிலர் வெளியாவதை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் பகுதியில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் திரையாங்கு முன்பு கேக் வெட்டியும், மேள தாளத்துடன் ஆடி, பாடியும் கொண்டாட்டம்.
ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்தின் வேண்டுகோள் வேண்டி இனி மது குடிக்கவே மாட்டோம் என உறுதி மொழி ஏற்று ரசிகர்கள் பலருக்கும் அறிவுரை வழங்கினர். தொடர்ந்து மது அருந்திய ரசிகர் இனி உடன் மதுவை குடிக்க மாட்டேன் மது போதையில் உறுதி தெரிவித்தார்.
ஜெயிலர் படம் எப்படி இருக்கு... ஓய்வு பெற்ற ஜெயிலரான டைகர் முத்துவேல் பாண்டியன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். தன் பேரனுடன் சேர்ந்து யூடியூப் வீடியோக்களை உருவாக்குவது, மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கி வருவது, மகன், பேரனின் ஷூவை துடைப்பது என ரிலாக்ஸாக வாழ்கிறார். சிலை திருட்டில் ஈடுபட்ட கும்பலை தேடிச் சென்ற முத்துவேல் பாண்டியனின் போலீஸ்கார மகன்(வசந்த் ரவி) மாயமாகிறார்.
மகன் இறந்த செய்தி வரும்போது முத்துவேல் பாண்டியனை குறை சொல்கிறார் மனைவி( ரம்யா கிருஷ்ணன்). நேர்மை நேர்மை என்று சொல்லி சொல்லி நீங்கள் வளர்த்தது தான் மகனின் உயிர் போக காரணம் என்கிறார் மனைவி.மகனின் மரணத்திற்கு பழிவாங்க முடிவு செய்கிறார் முத்துவேல் பாண்டியன்.
படம் துவங்கி 40 நிமிடங்கள் கழித்து சூடுபிடிக்கிறது. ரஜினி படம் என்றால் அவருக்காக மாஸான அறிமுக காட்சி இருக்கும். ஆனால் ஜெயிலரில் அப்படி எதுவும் இல்லை. அங்கு தான் இது ரஜினி அல்ல நெல்சனின் படம் என்பது தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu