மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய வெள்ளம்

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை:  சாலைகளில் தேங்கிய வெள்ளம்
X
மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது; இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது.

மதுரை நகரில் பல இடங்களில், வியாழக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. மதுரையில், காளவாசல், அண்ணாநகர், யாகப்ப நகர், வண்டியூர், கோரிப்பாளையம், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையால், சாலைகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி, குளம் போல தென்பட்டது.

சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், மதுரை மேலமடை தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெரு, சௌபாக்யா விநாயகர் கோயில் தெரு, கோமதிபுரம் ஜூப்பிலி டவுன், தாழை வீதி, அம்பிகை நகர் பகுதிகளில் சாலைகளில் பள்ளமும், சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால், பாதசாரிகள் திண்டாடினர். ஆகவே, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!