திருப்பரங்குன்றம் கோயிலில் மழையால் இடிந்த சுற்றுச்சுவர்: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பரங்குன்றம் கோயிலில்    மழையால் இடிந்த சுற்றுச்சுவர்: பக்தர்கள் அதிர்ச்சி
X

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் லெட்சுமி தீர்த்தக்குளத்தில் இடிந்த படிக்கட்டுகள்

திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள லட்சுமி தீர்த்த தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் மண்ணரிப்பால் இரண்டு இடங்களில் இடிந்தது

தொடர் மழையால் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் லட்சுமி தீர்த்த சுற்றுச்சுவற்றின் ஒரு பகுதி சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ளே அமைந்துள்ளது லட்சுமி தீர்த்தம் தெப்பக்குளம். இந்த குளமானது தெய்வானை அம்மன் நீராடுவதற்காக கட்டப்பட்ட குளம் என கூறப்படுகிறது. பொதுவாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்தக் குளத்தில் கை கால்களை அலம்பி விட்டு, மூலவரை தரிசிக்க செல்வது வழக்கம்., மேலும் முகத்தில் ஏற்படும் அரும்பாறை பருக்கள் மற்றும் தேமல் உள்ளிட்ட உபாதைகளை போக்குவதற்கு பக்தர்கள் இந்த குளத்தில் உப்பு மிளகு வாங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வாடிக்கையாகும்.

பல ஆண்டுகளாக லட்சுமி தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர்கள் மிகுந்த பலவீனமடைந்து இடியும் தருவாயில் இருந்தன. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்தில் உள்ள லட்சுமி தீர்த்த தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் மண்ணரிப்பு ஏற்பட்டு இரண்டு இடங்களில் இடிந்து விழுந்தது.

தெப்பக்குளத்தை சுற்றி பொதுமக்கள் தங்கியிருப்பதால் தங்களது வீடுகளும் பாதிப்படையக்கூடும் என்றும், அருகில் ஆரம்பப் பள்ளியில் செயல்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.உடனடியாக அறநிலையத் துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இதை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture