/* */

தமிழ்நாட்டில் முதல் முறையாக கியூ.ஆர். கோடுடன் பால் அறிமுகம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக கியூ.ஆர். கோடுடன் பால் அறிமுகம்
X

தமிழ்நாட்டிலேயே மதுரையில் முதன்முறையாக கியூ.ஆர். கோடுடன் பால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கண்மணி, பால் நிறுவனத்தின் கண்ணாடி பாட்டிலில் கியூ.ஆர். கோடுடன் பால் அறிமுக விழா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கண்மணி பால் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மணிகண்டன் கூறுகையில், கண்மணி பால் நிறுவனம் தொடர்ந்து மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பாலை வழங்கி வருகிறது. இந்நிலையில், புது வித முயற்சியாக உழவர் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பாலை பெற்று தரமான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக கண்ணாடி பாட்டிலில் அரை லிட்டர் ,ஒரு லிட்டர் என்று ,க்யூ ஆர் கோடு உடன் பாலை தயார் செய்திருக்கிறோம்.

இதன் மூலம் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.க்யூ ஆர் கோடுடன் கூடிய பால் இதுதான் மதுரை மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே முதல் முறை.மேலும், மொபைல் செயலி மூலம் வீட்டுக்கு டெலிவரி செய்யக்கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார்.இந்நிகழ்வில், கண்மணி பால் நிறுவன அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 19 March 2023 1:15 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி