மதுரை அருகே அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா

மதுரை அருகே அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு  திருவிழா
X

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் அருள்மிகு ஸ்ரீ செவிடு தீர்த்த அய்யனார் கோவிலில்  நடந்த புரவி எடுப்பு திருவிழா

100 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற.அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா ஏராளமானோர் பங்கேற்றனர்

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் அருள்மிகு ஸ்ரீ செவிடு தீர்த்த அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு திருவிழா நூறு ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை செல்வ விநாயகர் திருக்கோவில் கணபதி ஹோமம் நடைபெற்ற பக்தர்கள் காப்பு கட்டுதல் தொடங்கி விரதம் இருந்து வந்தனர்.அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முகூர்த்த கால் நடப்பட்டது தொடர்ந்து முனியாண்டி கோவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஸ்ரீ மந்தை காளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அருள்மிகு ஸ்ரீ செவிடு தீர்த்த அய்யனார் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.தெருவெங்கும் அதிர்வேட்டு வாணவேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளில் ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ கருப்பசாமி குதிரை வாகனம் வலம் வந்தது. அப்போது பெண்கள் வீட்டின் முன்பாக தீபமேற்றி சாமிக்கு படையல் செய்து வழிபட்டனர். தொடர்ந்து செல்வ விநாயகர் ஆலயத்தில் வாகனம் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் கீழமாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் துரைப்பாண்டியன், ஜெயக்குமார், கிருஷ்ணன், பாலாஜி, விவேக் மற்றும் விழா கமிட்டியினர் கிராமத்தினர் கலந்து கொண்டனர்

அம்மச்சியார் அம்மனுக்கு ஆராதனை நடைபெற்று இன்று காலை சக்தி கிடா வெட்டுதல் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கீழமாத்தூர் கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!