மதுரை அருகே சாலை வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள் :கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

மதுரை அருகே, வேடர் புளியங்குளத்தில் சாலை வசின்றி தவிக்கும் கிராம மக்கள்.அதிகாரிகள் உடனடி நடவடிக்கை தேவை.
Public Demanded Action For New Road
தமிழகத்தில் அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் பாதிப்பு உள்ளிட்டவைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரும்ப ாதிப்பை ஏற்படுத்தியது. அனைத்து வீடுகளின் முன்னால் இடுப்பளவு தண்ணீர் இருந்தால் பொதுமக்கள் எப்படி வெளியே வரும். பல தினங்களாக மழைநீர் வடியாமல் இருந்ததால் தார்ரோடு, கான்கிரீட் ரோடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. பல இடங்களில் இருந்த மண்ரோடுகள் மழை பாதிப்பால் தற்போது சகதிகள் மிகுந்த ரோடுகளாக காட்சியளித்து வருகின்றன.
திருப்பரங்குன்றம் ஒன்றியம் ,வேடர் புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அங்கையற்கன்னி நகர் பகுதியில் மீனாட்சி நகர் விரிவாக்கம் உள்ளது. இந்தப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
Public Demanded Action For New Road
மண்ரோடுகள் அனைத்துமே கனமழையால் சகதிக்காடுகளாக மாறிவிட்டன. பொதுமக்கள் எப்படி நடப்பது வாகனங்களை இயக்குவது இதுதாங்க பிரச்னை சரி பண்ணுங்க...
இங்கு அடிப்படை தேவையான சாலை வசதி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்படவில்லையாம். இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்துஅ வர்கள் கூறுகையில்: "அடிப்படைத் தேவையில் ஒன்றான சாலை வசதி இந்த பகுதியில் பூர்த்தி அடையாமல் உள்ளது. பொதுமக்கள் சென்று வருவதற்கு எதுவாக தார் சாலை அமைக்கவில்லை. மண்பாதையும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்யும் போது சாலை சேறும் சகதிமாக மாறி விடுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருவதுடன் பொதுமக்களும் அதில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
மேலும், இதன் அருகே ஊராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குப்பை கிடங்கு செயல்பட்டு வருவதால், இங்கே கொட்டப்படும் குப்பை கழிவுகள் மழை நீரில் கலந்து நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மீனாட்சி நகர் விரிவாக்கம் பகுதியில் தரமான சாலை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu